நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இசைக் கருவிகள் / ஆடை அணிகலன் வாங்குவதற்கு தனி நபருக்கு ரூ.2,000/-மும், கலைக் குழுக்களுக்கு ரூ.6,000/-மும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது. விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் விவரம் விண்ணப்பிக்கும் கலைஞர்கள் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்றவராகவும், பதிவினைப் புதுப்பித்தவராகவும் இருத்தல் வேண்டும். தனிப்பட்ட கலைஞரின் வயது மார்ச் 31 தேதியில் 18 வயது நிரம்பியவராகவும், 60 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பப் படிவங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றது. தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும்பும் கலைஞர்கள் சுயமுகவரியிட்ட உறையில் ரூ. 10-க்கான தபால் தலையை ஒட்டி மன்றத்திற்கு அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம். உறுப்பினர்- செயலாளர்தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்31, பொன்னி, பி.எஸ். குமாரசாமி ராஜா சாலைசென்னை 600 028தொலைபேசி எண்: 044 - 24937471 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட தேதிக்குள் (மார்ச் மாதம்) மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும், விண்ணப்பங்களை நேரிலும் அளிக்கலாம். விண்ணப்பம்: நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இசைக்கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்க நிதியுதவி வழங்கும் திட்டம் வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9