வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை, தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் வழங்குகிறது. புது நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய ஸ்டார்ட்அப் விருதுகளை கடந்த 2019- ஆம் ஆண்டு தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை அறிமுகப்படுத்தியது. விருதுகளுக்கான பிரிவுகள் வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, குடிநீர், கல்வி, திறன் மேம்பாடு உள்ளிட்ட 20 துறைகளில் விருதுகள் வழங்கப்படவிருக்கிறது. விருதுகள் ஒவ்வொரு பிரிவில் வெற்றி பெறுவோருக்கு தலா ரூ. 10 லட்சம் ரொக்கப் பரிசாக அளிக்கப்படும். வெற்றியாளரும், இரண்டாம் இடம் வகிக்கும் இரண்டு பேரும் தங்களது கண்டுபிடிப்பை தகுந்த அதிகாரிகள் மற்றும் பெரு நிறுவனங்களின்முன் செயல்விளக்கம் அளித்து அதன்மூலம் புதிய வாய்ப்புகளை அவர்கள் பெறவும் ஏற்பாடு செய்யப்படும். விண்ணப்பிக்கும் முறை விருதுகளுக்கான விண்ணப்ப முறை குறித்து தெரிந்து கொள்ள https://www.startupindia.gov.in/content/sih/en/nsa-landing.html என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.