பிஎம் தக்ஷ் திட்டத்தின் நோக்கம் பிரதமரின் திறமையான, செயல்திறன்மிக்க பயனாளிகள் திட்டம், 2020-21-ம் ஆண்டில் மத்திய அரசு தொடங்கிய திட்டமாகும். பட்டியலின வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அறிவிக்கப்படாத பழங்குடியினர், கழிவுப்பொருட்கள் சேகரிப்பாளர்கள் உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது பிஎம் தக்ஷ் திட்டத்தின் [Pradhan Mantri Dakshata Aur Kushalta Sampann Hitgrahi (PM-DAKSH)] நோக்கமாகும். அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் அளிக்கப்படும் இப்பயிற்சி, அவர்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கும், ஊதியம் பெறக்கூடிய வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும் ஊக்குவித்து சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்கிறது. திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனங்களும் நிதி ஆதரவும் இத்திட்டத்தைச் சமூக நீதி, அதிகாரமளித்தல் துறையைச் சேர்ந்த தேசிய பட்டியலின வகுப்பினர் நிதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் [Department of Social Justice & Empowerment (DoSJE) namely, National Scheduled Castes Finance and Development Corporation (NSFDC)], தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் [National Backward Classes Finance and Development Corporation (NBCFDC)], தேசிய தூய்மைப் பணியாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் [National Safai Karamcharis Finance & Development Corporation (NSKFDC)] ஆகியவை செயல்படுத்துகின்றன. மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இந்த நிறுவனங்களுக்கு நிதி அளிக்கிறது. மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம் அமல்படுத்தும் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்களுக்கு திட்ட வழிகாட்டுதல்கள், பணி ஆணை ஆகியவற்றின்படி, பயிற்சிக்கான செலவுகளை இந்நிறுவனங்கள் அளிக்கின்றன. பயிற்சி நிறைவடைந்தப் பிறகு பயிற்சி நிறுவனங்கள் தாங்கள் பயிற்சி அளித்தவர்களில் குறைந்தபட்சம் 70 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பைப் (ஊதியம் பெறும் வேலைவாய்ப்பு அல்லது சுயதொழில்) பெற்றுத்தர வேண்டும். தவறினால் பயிற்சிக்கான செலவில் 30 சதவீதத் தொகையைக் கொண்ட 3-வது தவணை வழங்கப்படாது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326437®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் அலுவலகம்