மகளிர் நலனுக்காக சிறந்த சேவை புரிந்த சிறந்த சமூக சேவகர் & தொண்டு நிறுவனத்திற்கு விருது சுதந்திர தின விழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு ரொக்கப் பரிசு, தங்கப்பதக்கம் (10 கிராம் 22 காரட்), சான்று மற்றும் சால்வை வழங்கப்படும். சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு மட்டும் இப்பதக்கத்துடன் கூடுதலாக ரூ.50,000 (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்)க்கான காசோலை வழங்கப்படும். விண்ணப்பம் இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்வது தொடர்பான விவரங்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் www.awards.tn.gov.in பதிவு செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் விண்ணப்பித்தவர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டியவை: விண்ணப்பதாரரின் கருத்து (Booklet-4) தமிழ்-2 மற்றும் ஆங்கிலத்தில்-2 புத்தக வடிவத்தில் தயாரிக்கப்பட்டு அளவு புகைப்படத்துடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் ஒரு பக்கம் தனியரைப் பற்றிய விவரம் தமிழில் (மருதம் எழுத்துருவில்) மற்றும் ஆங்கிலத்தில் Soft Copy and Hard Copy இணைப்பு - படிவம் தமிழில் (மருதம் எழுத்துருவில்) மற்றும் ஆங்கிலத்தில் முழுமையாக பூர்த்தி செய்து Soft Copy and Hard Copy மாவட்ட ஆட்சித் தலைவர்களின் பரிந்துரைகள் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுவின் முன் சமர்ப்பிக்கப்படும். பரிந்துரைகள் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் 12 தேதிக்குள் அரசுக்கு சமர்ப்பித்தல் வேண்டும். வேண்டிய தகுதிகள் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் பெற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டியவர்களின் தகுதிகள்: தமிழ்நாட்டைப் பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற சமூக சேவை நிறுவனமாக இருத்தல் வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலர்களை நேரில் அணுகி கருத்துக்கள் சமர்ப்பிக்கலாம். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9