விகாஸ்பீடியா, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) முயற்சியில், வளர்ச்சி மற்றும் முன்னேற்றதிற்கான தகவல் பிராந்திய மொழிகளில் மக்களுக்கு கிடைப்பதை ஊக்குவிக்க, செயற்கை நுண்ணறிவு (AI) செறிவூட்டிய சுற்றுச்சூழல் அமைப்பை ஊக்குவிக்கிறது. இந்த முயற்சியை ஹைதராபாத்தில் உள்ள மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) செயல்படுத்துகிறது. இம்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட அறிவு பகிர்வு தளம் - www.vikaspedia.in . இது பன்மொழி (ஆங்கிலம் தவிர அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளையும் உள்ளடக்கியது), பல்துறை (அனைத்து முக்கிய வாழ்வாதாரத் துறைகளையும் உள்ளடக்கியது) மற்றும் பல்வகை (பல சேனல் தகவல் விநியோகம்) அறிவு பகிர்வு தளமாகும். தனிநபர்களும், நிறுவனங்களும் விகாஸ்பீடியா தளத்தில் இணைந்து, தங்களுக்கு விருப்பமான துறைகள் மற்றும் மொழிகளில் தகவல் (திருத்து/சேர்க்க) பகிர்ந்து கொள்ளலாம். விகாஸ்பீடியா இணையதளத்தின் தகவல், பங்களிப்பு மற்றும் பயன்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்க, துறை/மொழி தளத்தினை தொகுத்து வழங்கக்கூடிய ஆசிரியர்களை கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது. யார் தள ஆசிரியர் ஆகலாம் விகாஸ்பீடியாவில் காணப்படும் எந்தவொரு துறை/மொழிகளிலும் நிபுணத்துவம் பெற்ற தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள். சமூக நலனுக்காக தங்களின் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் மற்றும் விருப்பம் உடையவர் . இணையம் மற்றும் கணினி உபயோக அறிவு உள்ளவர் எந்தவொரு ICT பயன்முறையிலும் இந்திய மொழி மற்றும் ஆங்கிலத்தில் டிஜிட்டல் தகவல்களைப் பகிர்வதில் நிபுணத்துவம் உடையவர். விகாஸ்பீடியா தளத்தின் தகவல் பங்களிப்பாளராக இருத்தல் வேண்டும். தள ஆசிரியரின் பணி நோக்கம் அவர்கள் விரும்பும் விகாஸ்பீடியா துறை/மொழி போர்ட்டலைத் கண்காணித்தல். போர்ட்டலில் சேர்க்கப்பட்ட பக்கங்கள், கருத்துக்கள், விமர்சனங்களை கண்காணித்தல். நம்பகமான ஆதாரங்களில் இருந்து மக்கள் பயன்பெறும் சமீபத்திய தலைப்புகள் தொடர்பான செய்திகள், உள்ளடக்கத்தைப் சேர்த்தல். ஏற்கனவே உள்ள உள்ளடக்கத்தை அவர்கள் விரும்பும் இந்திய மொழியில் மொழிபெயர்த்தல். விகாஸ்பீடியா தகவல் மேம்பட பிற வள ஆதாரங்களின் (இணையதளங்கள், வலைப்பதிவுகள் போன்றவை) தொகுப்பை உருவாக்குதல். விகாஸ்பீடியா பயன்பாட்டுக்கான மேம்பாட்டுப் பகுதிகளைப் பரிந்துரைத்தல். விகாஸ்பீடியா தகவல் பங்களிப்பிற்கான நிறுவன/தனிநபர்கள் கூட்டமைப்பை உருவாக்குதல். விகாஸ்பீடியாவின் பயன்பாட்டை மேலும் மேம்படுத்துவதற்கான பிற செயல்கள். தள ஆசிரியருக்கான ஊக்கத்தொகை செயல்படும் காலத்திற்கான பாராட்டுச் சான்றிதழ் விகாஸ்பீடியா இணையதளம் மற்றும் சமூக ஊடக கணக்குகளில் அங்கீகரித்தல் ஊக்கத்தொகை - செயல்திறன் மற்றும் பங்களிப்பு அடிப்படையில் மிதமான ஊக்கத்தொகை தள ஆசிரியராவது எப்படி உங்கள் விண்ணப்பத்தை vikaspedia@cdac.in என்ற மின்னஞ்சலுக்கு அல்லது +91-7382053730 க்கு வாட்ஸ்அப் செய்யவும்